இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை.! முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.!

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை.! முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.!



modi meeting with chief ministers

இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் நேற்று மட்டும், 3.14 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ''கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால், ஊரடங்கு தேவையில்லை" என தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனையடுத்து நேற்று பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கவும், வினியோகத்தை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றை நிர்வகிப்பது தொடர்பாக உயர் மட்ட  ஆலோசனை கூட்டம் ஒன்றை பிரதமர் மோடி நடத்துகிறார். பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அவர் காணொலி காட்சி வழியாக அவசர ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்வதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.