தமிழகம் இந்தியா

இத்தனை பேர் இருந்தும் தனி ஆளாய் பிரதமர் மோடி செய்த காரியம்! வைரலாகும் வீடியோ.

Summary:

modi chennai beach

இந்தியா மற்றும் சீனா நாட்டின் முன்னேற்றம் குறித்து பேச்ச வார்த்தையில் ஈடுபட இரு நாட்டு தலைவர்களும் சென்னை வந்துள்ளனர். மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வருவதை ஒட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. 

அதில் சீன அதிபரை சந்தித்து பேசவும், பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இந்திய பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னையில் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார் பிரதமர் மோடி. 

இந்நிலையில் இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் நடைபாதை மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு கிடக்கும் குப்பைகளை தன் கையால் தனி ஆளாய் சுத்தம் செய்துள்ளார். சுமார் அரை மணி நேரம் சுத்தம் செய்துள்ளார் பிரதமர் மோடி. 

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பொது இடங்களை சுத்தமாகவும், நேர்த்தியாக வைத்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement