இந்தியா விளையாட்டு

சவுரவ் கங்குலியை தொலைபேசியில்தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி.!

Summary:

சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு தற்போது சுயநினைவுடன் இருக்கிறார். 

கங்குலியின் இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சையளித்து மருத்துவர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் உடல்நிலை குறித்து விசாரித்து, விரைவாக குணமடைய விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement