இந்தியா

சற்றுமுன் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மோடி! பெருமிதத்தில் இந்தியா!!

Summary:

modi announced good news to india people

நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான செய்தி அனைவரும் டிவி, ரேடியோ, மற்றும் இதர சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள் என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் அத்தகைய மகிழ்ச்சியான செய்தியை மோடி வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது, இந்தியா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் உள்ள செயற்கைக் கோளை இந்தியா 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் நமது சொந்தh செயற்கைக்கோளையே நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம்.

இந்நிலையில் விண்வெளி சக்தி நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும் செய்த இந்த சாதனையை 4 வது நாடாக தற்போது இந்திய செய்துள்ளது. 

மேலும் இது  நாட்டின் பாதுகாப்பிற்காகவும், விண்வெளியில் நமது விண்கலங்களை பாதுகாக்க இந்தியா எடுத்துள்ள பாதுகாப்பு முயற்சி மட்டுமே.இதனை இந்தியா யாருக்கு எதிராகவும் பயன்படுத்தாது. இந்த சோதனைக்குப் பிறகும், விண்வெளி மூலம் போர் தொடுக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என கூறியுளளார்.


 


Advertisement