இந்தியா

அடக்கொடுமையே.. இது எப்படி! வயிற்று வலியால் துடிதுடித்த நபர்! ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!!

Summary:

அடக்கொடுமையே.. இது எப்படி! வயிற்று வலியால் துடிதுடித்த நபர்! ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!!

கடும் வயிற்று வலியால் அப்படிப்பட்ட நபரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது உள்ளே மொபைல் போன் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எகிப்து நாட்டில் அஸ்வன் என்ற நகரில் வசித்து வந்த 33 வயது நிறைந்த நபர் ஒருவருக்கு கடந்த 6 மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அவர் சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல், உடல்நிலை சரியில்லாமலே அவர் இருந்துள்ளார். இவ்வாறு கடுமையாக சிரமப்பட்டு வந்த அந்த நபர் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் தனக்கு தொடர்ந்து கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் அவரது வயிற்று பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர். அப்பொழுது அவரது வயிற்றில் மொபைல் போன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் தான் 6 மாதத்திற்கு முன்பு செல்போனை விழுங்கியதாகவும்,  கழிப்பறைக்குச் சென்றால் சரியாகிவிடும் என நினைத்துகொண்டு தான் அசால்ட்டாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் செல்போனை எதற்காக அவர் முழுங்கினார் என்பது குறித்த காரணத்தை சொல்லவில்லை. இந்நிலையில் அந்த நபருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 


Advertisement