நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வை சுட்டுக் கொலை!! அணைத்து கட்சியினரும் அதிர்ச்சி!!

MLA died in function


MLA died in function

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின்  எம்.எல்.ஏ சத்யஜித் பிஸ்வாஸ் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நாடியா மாவட்டம், கிருஷ்ணகஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ சத்யஜித், நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது சமூக விரோதிகள் எம்.எல்.ஏ சத்யஜித் பிஸ்வாஸை துப்பாக்கியால் சுட்டுவிட்டு  தப்பிச் சென்றுள்ளனர். 

mla

ரத்த வெள்ளத்தில் விழுந்த பிஸ்வாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து எம்.எல்.ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.

இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த, நாடியா மாவட்ட  திரிணாமூல் காங்கிரஸ்  தலைவர் கவுரிசங்கர் தத்தா, பிஸ்வாஸ் கொலைக்கு என்ன காரணம் என்றும், யார் அந்த கொலையாளிகள் என்றும் விரைவில் கடுபிடிக்கவேண்டும் என காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.