பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு.க ஸ்டாலின்! அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு.க ஸ்டாலின்! அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?


mk stalin wishes to modi


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த மாநிலம் சென்றுள்ள பிரதமர், பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடக்கி வைக்கிறார்.

இன்று தனது 69-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

இந்தநிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், “திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.