அது நடிகை ஹேமமாலினியின் கன்னம்போல.... அமைச்சரின் சர்ச்சை பேச்சு.! மன்னிப்பு கேட்ட அமைச்சர்.!

அது நடிகை ஹேமமாலினியின் கன்னம்போல.... அமைச்சரின் சர்ச்சை பேச்சு.! மன்னிப்பு கேட்ட அமைச்சர்.!


minister-compared-rod-on-actress

நடிகை ஹேமமாலினி கன்னத்துடன் சாலையை ஒப்பிட்டு பேசிய சிவசேனா மந்திரி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில குடிநீர் வினியோக துறை மந்திரியாக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், ஜல்காவ் புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்தநிலையில், அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசுகையில், தனது தொகுதியில் உள்ள சாலைகளை நடிகையும், பா.ஜனதா எம்.பி. யுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பேசுகையில், எதிர்க்கட்சியினர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்றும் அவை, நடிகை ஹேமமாலினியின் கன்னம்போல் இல்லை என அவர்கள் கருதும் பட்சத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் அவர் பேசினார். 

அமைச்சர் பேசும் காட்சி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர் சிவசேனா மந்திரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் மந்திரி குலாப்ராவ் பாட்டீல் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனையடுத்து, தற்போது அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்டுள்ளார்.