தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அப்பளம் சாப்பிட்டால் கொரோனா ஒழியும் என்று கூறிய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடையலாம் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அப்பளப் பாக்கெட்டுகள் இரண்டை கையில் பிடித்துக் கொண்டு, இந்த அப்பளம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும். இந்த அப்பளத்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு பாராட்டுக்கள் என தெரிவித்தார்.