கூலி வேலை பார்த்தவர் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம்.! வேலைக்கு நடுவே கையில் சிக்கிய அதிர்ஷ்டம்..!
கூலி வேலை பார்த்தவர் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம்.! வேலைக்கு நடுவே கையில் சிக்கிய அதிர்ஷ்டம்..!

சுரங்கம் தோண்டும் தொழிலாளி ஒருவர் ஒரே நாளில் லட்சதீபதியாக மாறியுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுபால் என்ற சுரங்கம் தோண்டும் தொழிலாளி. சுரங்கம் தோண்டுவதை வேலையாக பாத்துவரும் இவர் சமீபத்தில் வழக்கம்போல் சுரங்கம் தோண்டும் பணிக்கு சென்றுள்ளர். சுரங்கம் தோண்டிக்கொண்டறிந்தபோது சுபாலுக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ஆம், அவர் சுரங்கத்தை தோண்டியபோது அவருக்கு 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்துள்ளது. அவர் அந்த வைரத்தை வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளார். வைரம் ஏலம்விடப்பட்டு 12 சதவீதம் வரி போக, 88 சதவீதம் தொகை அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுபாலுக்கு சுமார் 30 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை பணம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த சுபால் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.