இந்தியா உலகம் லைப் ஸ்டைல்

உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு பிரியாணியை பாத்துருக்கவோ, சாப்ட்ருக்கவோ மாட்டீங்க!! இதுதாங்க சாக்லேட் பிரியாணி!!

Summary:

சாக்லேட் பிரியாணி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலவிதமான விமர்சனங்களை பெற்றுவரு

சாக்லேட் பிரியாணி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலவிதமான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு பிரியாணி. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, பீப் பிரியாணி என பலவிதமான பிரியாணி ரகங்கள் உள்ளன. கடந்த ஆண்டு வெட்டுக்கிளி பிரியாணி கூட மக்கள் மத்தியில் பிரபலமாச்சு.

ஆனால் சாக்லேட் பிரியாணி என்ற தற்போது வைரலாகிவருகிறது. ஆமாங்க.. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் அமைத்துள்ள கடை ஒன்றித்தால் இந்த சாக்லேட் பிரியாணி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த சாக்லேட் பிரியாணி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த YouTube சேனல் நபர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

தாது நிறைய பிரியாணியை வைத்து, அதில் சாக்லெட்டை ஊற்றி சாப்பிட்டுக்கொண்ட அது மிகவும் நன்றாக இருப்பதாக கூறுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும், விமர்சனம் கூறுபவர் நன்றாக நடிப்பதாகவும், அவரது நடிப்புக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

காரணம், பிரியாணி என்றாலே அது காரசாரமாக இருந்ததால்தான் நன்றாக இருக்கும். ஆனால், அதனுடன் சாக்லெட்டை கலந்து சாப்பிடும்போது அதன் சுவை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என பிரியாணி ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


Advertisement