தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
காதலனை கடத்திவிட்டதாக காதலிக்கு வந்த அழைப்பு! இறுதியில் காதலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.

இளைஞர் ஒருவர் தன்னை தானே கடத்திவிட்டு தன்னை யாரோ கடத்திவிட்டதாகவும், 3 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுதலை செய்வதாகவும் தனது காதலிக்கு தொலைபேசியில் மிரட்டல் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட்டை சேர்ந்த மெஹுல் ஜோஷி என்ற 23 வயது வாலிபர், தனது அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு தான் காணாமல் போனதாக காட்ட தனது தொலைபேசியை அணைத்துவிட்டு, வேறொரு சிம் அட்டையை அதில் மாட்டியுள்ளார். அதன்பின்னர் குரலை மாற்றும் ஆப் மூலம் தனது காதலிக்கு போன் செய்து உனது காதலனை கடத்தி விட்டதாகவும், மூன்று லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போய் அந்த இளைஞரின் காதலி இஷா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து தொலைபேசி அழைப்பு வந்த சிக்னலை வைத்து போலீசார் ட்ராக் செய்ததில் குட்ச் மாவட்டத்தில் புகுஜ் என்னும் இடத்தில் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து அந்த இளைஞரை விசாரித்ததில் தன் மீது தனது காதலிக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்பதை சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்ததாக போலீசாரிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார். தப்பான தகவல் கொடுத்து காதலியை மிரட்டியதை அடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துளனர்.