ஆதரவற்றோருக்கு 10 ஆண்டுகளாக இலவச உணவளித்து வரும் மனிதர்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

ஆதரவற்றோருக்கு 10 ஆண்டுகளாக இலவச உணவளித்து வரும் மனிதர்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!



man-serve-free-food-last-10-years

ஹைதராபாத்தை சேர்ந்த ஆசிப் என்பவரின் மனைவி மற்றும் மகள் இறந்துவிட்டனர். இதனால் தனது மகள் மற்றும் மனைவியை இழந்த ஆசிப் , சேவை செய்ய விரும்பி கடந்த 2010ஆம் ஆண்டு சாகினா அறக்கட்டளை என்ற தொண்டு  நிறுவனத்தை தொடங்கினார்.

இவர் ஆரம்பித்த அறக்கட்டளை மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு உணவளித்து வருகிறார். நகரத்தின் பல்வேறு இடங்களில் சமையல் கூடங்கள் நிறுவப்பட்டு இந்த சேவையை செய்து வருகிறார்.  கொரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்க காலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்ந்து உணவு அளித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிப் கூறுகையில், இந்தச் சேவையை தெலங்கானா முழுவதும் செயல்படுத்தும் திட்டம் இருக்கிறது. இதற்க்கு உதவ தன்னார்வலர்களும் முன்வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தச் சேவையை நாங்கள் வழங்கிவருகிறோம். "பசிக்கு மதம் கிடையாது". குப்பைத்தொட்டியில் கிடக்கும் உணவை சாப்பிடும் பல நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நாங்கள் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். அவரது சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.