"வேலைக்கு சேர தானே காசு கேட்டேன்.." போட்டித் தேர்வுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம்.!! தந்தையை கொன்ற மகன்.!!



man-murdered-father-for-not-giving-money-for-exams

மகாராஷ்டிரா மாநிலத்தில் போட்டி தேர்வுக்கு பணம் தர மறுத்த தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மகனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்திலுள்ள ஹின்பால்னர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் பஞ்சல். 24 வயதான இவர் காவலர் தேர்விற்காக தயாராகி வந்திருக்கிறார். இந்நிலையில் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு தந்தையிடம் பணம் கேட்டிருக்கிறார் அஜய். ஆனால் பணம் தர மறுத்த தந்தை அவரை திட்டியதாக தெரிகிறது.

India

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி தேர்வு நாள் நெருங்கி வருவதை தொடர்ந்து மீண்டும் அஜய் பணம் கேட்டுள்ளார். இதனால் தந்தை மற்றும் மகனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஜய் மரக்கட்டையால் தனது தந்தையின் தலையில் கொடூரமாக தாக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!

இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை கொலை செய்த அஜய் பஞ்சலை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!