"மச்சானுடன் கள்ள உறவு..." மனைவி எரித்து கொலை.!! கணவன் பரபரப்பு வாக்குமூலம்.!!



man-murdered-burnt-body-of-woman-husband-shocking-state

தெலுங்கானா மாநிலத்தில் 2 குழந்தைகளின் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் ராயவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலம். இவர் மகபூப் நகரை சேர்ந்த  ஸ்ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தனது அக்கா கணவருடன் கள்ள தொடர்பிலிருந்த ஸ்ராவணி தனது கணவன் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு மச்சானுடன் ஓடினார். இதன் பிறகு கடந்த 1 வருடத்திற்கு முன்பு மனம் திருந்திய ஸ்ராவணி தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

India

இதனை ஏற்றுக் கொண்ட சைலம் தனது மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஸ்ராவணி அடிக்கடி செல்போனில் பேசுவதும் சாட் செய்வதுமாக இருந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த சைலம் மீண்டும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார் ஸ்ராவணி. இதனையடுத்து தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வர சென்றருக்கிறார் சைலம். தனது கணவரின் அழைப்பை ஏற்ற ஸ்ராவணி அவருடன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க: 2 முறை கரு கலைப்பு.!! "இப்போவே கல்யாணம் பண்ணு..." மிரட்டிய காதலி.!! எரித்து கொன்ற காதலன்.!!

அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியிலிருந்த காட்டுப்பகுதியில் இறங்கி பழம் பறித்துச் செல்லலாம் எனக் கூறிய சைலம் மனைவியை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதன் பிறகு இறந்த சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அந்தப் பகுதியில் எரிந்த சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றி காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த கொடூர சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும் குற்றவாளி சைலம் மனைவியை கொலை செய்ததை வாக்குமூலமாக காவல்துறையிடம் அளித்தார்.

இதையும் படிங்க: "வினையான சந்தேகம்.." கர்ப்பிணி மனைவி துண்டு துண்டாக வெட்டி கொலை.!! கணவன் கொடூர செயல்.!!