"ஜனநாயகன் ரிலீஸில் பழைய ரசிகராக இருக்க விஜய் அனுமதி.?!" அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!
நம்ம காதல் சொர்க்கத்துல சேரட்டும்.. காதலி கொலை., காதலன் தற்கொலை..!
திருமணம் நிச்சியிக்கப்பட்ட காதலியை கொலை செய்த காதலன், இறுதியில் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
காதல் ஜோடி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாஹில் லவ்ஹாரே. அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி வைஷ்ணவி. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், வைஷ்ணவிக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்குள் கள்ளக்காதல்.. தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூர கொலை.. புதரில் நடந்த பயங்கரம்.!

ஆத்திரம்:
இந்த விவகாரம் சஹிலுக்கு தெரியவரவே, ஆத்திரத்தில் இருந்தவர் வைஷ்ணவியை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, வைஷ்ணவி தனது வருங்கால கணவருக்கு தொடர்புகொண்டு விபரத்தை கூறியுள்ளார்.
நேரில் வந்தார்:
இதனால் போன் இணைப்பை துண்டிக்காமலேயே இளைஞர் நேரடியாக சம்பட இடத்திற்கு புறப்பட, 22 நிமிடங்களுக்கு முன்பு திடீரென போன் அணைக்கப்பட்டது. நேரில் சென்று பார்த்தபோது வைஷ்ணவி சடலமாக இருந்துள்ளார். இளைஞர் பெண்ணை கொலை செய்தது உறுதியான நிலையில், மரத்தில் தூக்கிட்டு நிலையில் சஹீலின் உடலும் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலை கைவிடாததால் ஆத்திரம்.. தங்கையை அடித்தே கொன்ற சகோதரன்..!