பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் நேர்ந்த விபரீதம்.! துடிதுடிக்க உயிரிழந்த மனைவி.! பகீர் சம்பவம்!!

பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் நேர்ந்த விபரீதம்.! துடிதுடிக்க உயிரிழந்த மனைவி.! பகீர் சம்பவம்!!


man-killed-wife-in-kerala

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த தீபிகா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. மேலும் இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. அவினாஷ் பெங்களூருவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் ஊருக்கு திரும்பிய அவர் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்துள்ளார்.

அவினாஷ் எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமலேயே தனது குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது தீபிகாவிற்கு பிடிக்கவில்லை. குழந்தைக்கு நோய் தொற்று பரவிவிடுமோ என பயந்த அவர் கணவரிடம் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்காதீங்க என கண்டித்துள்ளார்.

kill

ஆனாலும் மனைவியின் பேச்சை பொருட்படுத்தாத அவினாஷ் தொடர்ந்து அவ்வாறே செய்து வந்துள்ளார். நேற்றும் அவ்வாறே செய்தநிலையில் கணவன்- மனைவி இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவினாஷ் உடனே கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

 தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் அவினாஷை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.