மாமியார் இறந்ததை கொண்டாடிய மருமகள்! ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்

மாமியார் இறந்ததை கொண்டாடிய மருமகள்! ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்


man killed wife for wife happy on mom's death

மஹாராஷ்டிராவில் பெண் ஒருவர், கடந்த சனிக்கிழமை தனது மாமியார் இறந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவை சேர்ந்த சந்தீப் மற்றும் சுபாங்கி ஆகியோருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சந்தீப்பின் தயார் மாலதி, 30 வயது, இவர்களுடன் தங்கி இருந்துள்ளார். உடல் னால குறைவால் அவதிப்பட மாலதி கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். 

இவரைத்தொடர்ந்து நேற்று புதன்கிழமையன்று சந்தீப்பின் மனைவி சுபாங்கியும் திடீரென மடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சுபாங்கி, மாமியார் இறந்த சோகத்தில் தான் தற்கொலை செய்து கொண்டார் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர். 

ஆனால், போலீசார் இது குறித்து விசாரணை செய்கையில், நான் தான் என் மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தேன் என சந்தீப் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை கேட்ட அனைவர்க்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

அதோடு அவர் கூறியுள்ள காரணம் இன்னும் விசித்திரமாக இருந்துள்ளது. அதாவது, அவரது தாயார் இறந்த நாளில் இருந்தே சுபாங்கி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளார். அதனை மனதிற்குள்ளே வைத்துக்கொள்ள தெரியாத சுபாங்கி அவ்வப்போது வெளியில் கூறி உற்சாகமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப், மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.