இந்தியா

வரதட்சணை கொடுமை: சத்து மாத்திரை என ஏமாற்றி சயனைடு கொடுத்து மனைவியை கொன்ற கொடூர கணவன்

Summary:

Man killed wife buying cyanide

ஆந்திராவில் வரதட்சனைக்காக சத்து மாத்திரை என ஏமாற்றி ஆன்லைனில் சயனைடு வாங்கிக்கொடுத்து மனைவியை கொலை செய்துள்ளார் வங்கி மேலாளர்.

ஆந்திராவின் மதனப்பள்ளியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிபவர் ரவி சைதன்யா. கடந்த 2015 ஆம் ஆண்டு இவருக்கும் ஆமினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. 

திருமணத்தின் போது பெண் வீட்டார்கள் வரதட்சணையாக 1 ஏக்கர் நிலம் மற்றும் 15 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஆமனியின் தங்கைக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் 15 லட்சம் ரொக்கம் கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இதனை அறிந்த ரவி தனக்கும் கூடுதலாக 1 ஏக்கர் நிலம் வாங்கி தருமாறு மனைவியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ஆமினி மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரவி மனைவியை சூசகமாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சையனைடு வாங்கிய ரவி மனைவியிடம் சத்து மாத்திரை என ஏமாற்றி சாப்பிட வற்புறுத்தியுள்ளார். 

சயனைடை சாப்பிட்ட ஆமினி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். உடனை ரவி தனது மனைவி கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டதாக நாடகமாடி ஆமினியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். 

ஆமினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் ஆமினியின் மரணத்தில் சந்தேதமடைந்த காவலர்கள் உடற்கூறு ஆய்வு செய்ய கூறியுள்ளனர். அதன்பிறகு தான் ஆமினி சையனைடு சாப்பிட்டு இறந்தது தெரிவந்துள்ளது. 

அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ரவி தான் ஆன்லைனில் சையனைடு வாங்கி கொடுத்திருப்பது தெரியவந்தது. அவர் எப்படி சையனைடு வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement