இந்தியா

4 வயது மகன் கண்முன்னே கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க சுட்டு கொலை செய்த கணவன்.! குடிக்க பணம் தரமறுத்ததால் நேர்ந்த கொடுமை.!

Summary:

Man killed pregnant wife who refused to give money for drinks

மதுகுடிக்க பணம் தரமறுத்த கர்ப்பிணி மனைவியை கணவனே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூன்றாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த திங்கள் முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சர்பாதான் பகுதியில் உள்ள படோலி என்ற கிராமத்தில் வசித்துவரும் தீபக் என்ற நபர் மதுகுடிக்க பணம் வேண்டும் என மனைவியிடம் கேட்டுள்ளார். மனைவி பணம் தரமறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இறுதியில் கோபத்தின் உச்சிக்கு சென்ற தீபக் வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து தனது நான்கு வயது மகன் கண்முன்னே தனது கர்ப்பிணி மனைவியை சுட்டு கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த தீபக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement