இந்தியா

அட பாவி.. வீட்டின் சுவரை உடைக்க உடைக்க வெளியே வந்த பெண்ணின் எலும்புக்கூடு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.

Summary:

காதலித்த பெண்ணை கொலை செய்து வீட்டின் சுவற்றில் மறைத்துவைத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்த பெண்ணை கொலை செய்து வீட்டின் சுவற்றில் மறைத்துவைத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவரும் காதலித்துவந்தநிலையில், இந்த விவகாரம் இரண்டு பேரின் பெற்றோருக்கும் தெரியவந்ததை அடுத்து அவர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த இளைஞரும், இளம் பெண்ணும் வீட்டில் இருந்து வெளியேறி, வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அந்த வீட்டில் குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் அந்த பெண்ணிற்கு தாலி காட்டாமல் குடும்பம் நடத்தியுள்ளார். இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்தநிலையில் தனக்கு தாலி கட்டி, பின்னர் தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அந்த பெண் அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒருநாள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில், அந்த இளைஞர் தன்னை நம்பி வந்த பெண்ணை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணின் உடலை, வீட்டின் குளியலறை சுவரை உடைத்து, அந்த சுவற்றில் மறைத்துவைத்து சிமெண்ட் கொண்டு பூசியுள்ளார். இந்நிலையில் தங்கள் மகளிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லாத பெற்றோர் தங்கள் மகள் குறித்து அந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து அந்த இளைஞரின் வீட்டை சோதனை செய்த போலீசார், வீட்டின் ஒரு இடம் மட்டும் புதிதாக சிமெண்ட் வைத்து பூசப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர்.

இதனை அடுத்து சுவரை உடைத்து பார்த்தபோது, சுற்றில் இருந்து அந்த பெண்ணின் எலும்பு கூடுகள் வெளியே வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement