"யாரு கூட படுத்தாச்சும், எனக்கு குழந்தை பெத்து கொடு.." சைக்கோ கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
கர்நாடக மாநிலத்தில் குழந்தைக்காக மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லாததால் மனைவியை வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்ள கணவன் வற்புறுத்தியிருக்கிறார். மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவரை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் கணவர்.
குழந்தை இல்லாமல் தவித்த தம்பதி
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பீமன்னா மற்றும் பஸம்மா தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. பல்வேறு முயற்சிகள் செய்தும் குழந்தை இல்லாததால் கணவர் பீமன்னா கடும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார். மேலும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் அதற்காக எதையும் செய்யும் மனநிலையில் இருந்துள்ளார்.
மனைவியை பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தல்
இந்நிலையில் பிற ஆண்களுடன் உடலுறவு கொண்டால் தனது மனைவிக்கு குழந்தை கிடைக்கும் என்று நம்பிய அவர் தனது மனைவியை பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். மேலும் அவரது மனைவி இதற்கு மறுக்கவே அவரை அடித்து கொடுமை செய்துள்ளார். இதே போன்ற கொடுமை அடிக்கடி நடந்து வந்திருக்கிறது.
இதையும் படிங்க: தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க போலி ரைடு; அரசுப்பணியாளர்களின் திருட்டு சேட்டை அம்பலம்.. நால்வர் கைது.!
கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மனைவியை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ளுமாறு பீமன்னா வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால் அவரை கடுமையாக தாக்கி இருக்கிறார் பீமன்னா. மேலும் ஆத்திரத்தில் தனது மனைவியின் கழுத்தை நெறித்து அவரை படுகொலை செய்துள்ளார். மேலும் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்த அவர், பஸம்மா மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை
இதனைத் தொடர்ந்து மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அவரது மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பஸம்மா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீமன்னா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போனை பரிசோதித்தனார். அப்போது பீமன்னா பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளுமாறு தனது மனைவியை வற்புறுத்திய வாய்ஸ் மெசேஜ் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஓவிய ஆசிரியரின் செல்போனில் 5000+ நிர்வாண விடியோக்கள்; விசாரணையில் பரபரப்பு தகவல்.!