ஓவிய ஆசிரியரின் செல்போனில் 5000+ நிர்வாண விடியோக்கள்; விசாரணையில் பரபரப்பு தகவல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், மாலுரு தாலுகாவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஓவிய ஆசிரியராக முனியப்பா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
5000+ விடியோக்கள்
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஆசிரியரின் செல்போனும் கைப்பற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிர்ச்சிதரும் விஷயமாக, ஓவிய ஆசிரியரின் செல்போனில் கிட்டத்தட்ட 5000 க்கும் அதிகமான நிர்வாணா விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளன.
இதையும் படிங்க: 7 வயது சிறுமியை சீரழித்த பூசாரி; அடித்துநொறுக்கிய பொதுமக்கள்.!
காவல்துறை விசாரணை
இதனையத்து, ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் ஏற்கனவே இரண்டு முறை இதுபோன்ற புகார்களில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். அவர் செல்போனில் உள்ள விடீயோக்களை அங்கிருந்து எடுத்தார்?. அல்லது எங்கேனும் ரகசிய கேமிரா வைத்து படம் பிடித்தாரா? என விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்; 5 வயது சிறுமி பலாத்காரம்..!