தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்; 5 வயது சிறுமி பலாத்காரம்..!
தென்மேற்கு டெல்லியில் வசித்து வந்த 5 வயது சிறுமியின் பெற்றோர் இருவரும் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் காலை நேரத்தில் வேலைக்கு சென்றுவிட்டால், மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறுமி தனது வீட்டில் இருப்பார். அக்கம் பக்கத்தினர் அவரை பராமரித்து வந்துள்ளனர்.
சிறுமி பலாத்காரம்
இதனிடையே, சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியின் வீட்டில் இருந்து அவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் வெளியேறி சென்றுள்ளான்.
இதையும் படிங்க: கலியுகத்தில் எத்தனை கொடுமை?.. 6 வயது சிறுமி, ஆடு பலாத்காரம்.. கிழட்டு காமுகன் அட்டூழியம்..!
போக்ஸோவில் கைது
இதனால் சிறுமியை கவனித்த அக்கம்பக்கத்தினர், அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து சிறுவனும் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: ஜெர்மனிய பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்; குற்றவாளி புற்றுநோயால் உயிரிழப்பு.!