இந்தியா

சாகதான் போறோம்னு அப்போ அந்த இளம் பெண்ணுக்கு தெரியல.. காதலிக்க மறுத்த பெண்ணை தனியாக அழைத்து இளைஞர் செய்த கொடூர காரியம்..

Summary:

காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை

காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் அருகே உள்ள சென்னூர்ராஜு பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த சரண் என்ற இளைஞர், சிந்தலசெருவு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்துவந்துள்ளான். பலமுறை தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியும், அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சரண், அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளேன். அதன்படி, சம்பவத்தன்று உன்னிடம் கடைசியாக ஒருமுறை பேசவேண்டும் என தனியாக அந்த பெண்ணை சரண் அழைத்துள்ளார். விபரீதம் புரியாமல் அந்த பெண்ணும் அந்த இளைஞர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளது.

அங்கு, கடைசியாக மீண்டும் தனது காதலை சொல்லி ஏற்றுக்கொள்ளும்படி சரண் கேட்டுள்ளான். ஆனால் சிரிஷா மீண்டும் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சிரிஷாவின் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளான் சரண்.

சிரிஷாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சரணை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் கீழே விழுந்து கிடந்த சிரிஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிரிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சரணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement