அம்மாவுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த செயல்... குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா ஊரடங்கு எதிரொலி! திருடனாக இருந்து திருந்திய வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
கொரோனா ஊரடங்கு எதிரொலி! திருடனாக இருந்து திருந்திய வாலிபர் எடுத்த விபரீத முடிவு!

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில், தற்போது 1600க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது. இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்கள் ஒருவேளை உணவிற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்த தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேகாலயா ஷில்லாங் பகுதியை சேர்ந்தவர் ஆல்ட்ரின் லிங்டோ. இவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உணவு விடுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டநிலையில், ஆல்ட்ரின் தனது ஃபேஸ்புக்கில் நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பிறந்ததும் என் தாய் இறந்துவிட்டார். அதனை தொடர்ந்து எனது சுய தேவைக்காக ஷில்லாங்கில் திருடனாக இருந்தேன். பின்னர் சிறிது நாளில் அனைத்தையும் விடுத்து புது வாழ்க்கை வாழ்வதற்காக ஆக்ரா வந்து, உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். ஆனால் தற்போது ஊரடங்கால் அந்த வேலையும் போய்விட்டது. இனி நான் எங்கு போவேன்.
எனக்கான எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டது. இனி நான் எங்கே போவேன். என் கடை உரிமையாளரும் என் மீது இரக்கம் காட்டவில்லை. தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள், எனக்குத் தற்கொலையைத் தவிர வேறுவழி தெரியவில்லை. உங்களுக்கு மனிதாபிமானம் இருந்தால் என் உடலை என் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துவிடுங்கள். அப்போதாவது சற்று நிம்மதியாக இருப்பேன். நான் விளையாட்டாக கூறவில்லை, தயவு செய்து என் உடலை எடுத்துச் செல்ல உதவுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்த ஃபேஸ்புக் பதிவை கண்ட போலீஸார் உடனடியாக ஆல்ட்ரின் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அனைத்து நடவடிக்கைகளையும் முடிந்த பின்னர் ஆல்ட்ரின் உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.