இந்தியா காதல் – உறவுகள்

நண்பர்களின் நெருங்கிய பாசம்!. நண்பனுக்காக பெண்ணாக மாறிய நெகிழ்ச்சி சம்பவம்!.

Summary:

man changed his sex for his friend

மேற்குவங்கத்தில் இரண்டு நண்பர்கள் நெருக்கமாய் பழகி, அந்த நட்பு காதலாக மாறி உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

மேற்குவங்கத்தை சேர்ந்த சக்னிக் சக்ரபோர்தி மற்றும் சவுத் தினஜ்பூர் ஆகிய இருவரும் மாடலிங் போட்டியில் சந்தித்துக்கொண்டார்கள். அன்றையிலிருந்து நண்பர்களாக பழகிய அவர்கள் இருவரும்   ஒருகட்டத்தில் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

தங்களையே அறியாமல் அதிகளவு அன்பை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இருவரும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது உறவை யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, ஆணாக இருந்த அனிக் தத்தா, தனது பாலினத்தை அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அனிக் தத்தா, தன் காதலன் சக்னிக் சக்ரபோர்தியை திருமணமும் செய்து கொண்டார். தற்போது இருவரும் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர்.


Advertisement