குழந்தைகள் கண்முன் தாய் கழுத்தை நெரித்துக்கொடுர கொலை.. கணவன் வெறிச்செயல்.. அலறிய பிஞ்சுகள்.!
மனைவியை கொலை செய்த கணவர் நேரடியாக காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
தம்பதிகள்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சல்மான் கான். இவரின் மனைவி ஹஷின் பானு. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாசிம் மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!
நடந்தை சந்தேகம்:
இதனிடையே, தனது மனைவி ஹஷின் நடத்தையில் சல்மான் கான் சந்தேகப்பட்டு இருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிலை வந்துள்ளது. சம்பவத்தன்று மனைவி, குழந்தைகளுடன் இவர்கள் காரில் வாசிம் மாவட்டம் கரஞ்சா பகுதிக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.
வாக்குவாதம்:
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சல்மான் கான் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கி இருக்கிறார். குழந்தைகள் கண்முன்னே தாயை கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின் அங்குள்ள காவல் நிலையத்துக்கு நேரில் சென்று சரணடைந்துள்ளார்.
அதிர்ந்துபோன அதிகாரிகள்:
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டனர். மேலும், குழந்தைகளை பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!