தலைக்கேறிய போதையால் இரண்டு வயது பெண் குழந்தையை நாசம் செய்த வாலிபர்! தலைநகர் டெல்லியில் பயங்கரம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுக்கு முக்கிய காரணமா கருதுபடுவது மதுப்பழக்கம். அளவுக்கு அதிகமான போதையினால் செய்வதறியாது இதுபோன்ற குற்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் அதிக குடிபோதையினால் டெல்லியை சேர்த்த இரண்டு வயது சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் கொடுமை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையுடன் சாலை ஓரத்தில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில் பார்த்தபோது அருகில் இருந்த அவரது குழந்தையை காணவில்லை. எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் மறுநாள் காலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய டெல்லி பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஓன்று மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் சிகிச்சை பெறுவதாக கூறிய குழந்தை காணாமல் போன அந்த குழந்தைதான் என்பதை உறுதி செய்தனர்.
விசாரணையில் போதைக்கு அடிமையான 24 வயது வாலிபர் அந்த குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து ரயில் தண்டவாளம் அருகே விட்டுச் சென்றது தெரிய வந்தது.
ரயில் தண்டவாளம் அருகே கிடந்த குழந்தையை போலீசார் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அந்த பகுதியில் இருந்த CCTV காட்சிகளை சோதனை செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளார் காவல்துறையினர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.