ஸ்விக்கி டி-சர்ட் போட்டு, வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை.. மக்களே விழிப்புடன் இருங்கள்.!

ஸ்விக்கி டி-சர்ட் போட்டு, வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை.. மக்களே விழிப்புடன் இருங்கள்.!


maharashtra-thane-swiggy-t-shirt-man-theft-house-with-k

உணவு டெலிவரி செய்யும் நபரைபோல சீருடை அணிந்து வந்த மர்ம நபர், வீட்டில் சிறுவனின் கழுத்தில் கத்தி வைத்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, பஞ்சபகடி பகுதியில் 39 வயது பெண்மணி தனது கணவர் மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். பெண்ணின் கணவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், வீட்டில் தாய் மற்றும் மகன் தான் பெரும்பாலும் இருந்துள்ளனர். விடுமுறை நாட்களில் மட்டும் பெண்ணின் கணவர் குடும்பத்துடன் இருந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று மதியம் 12:45 மணியளவில் ஸ்விக்கி நிறுவனத்தின் டி-சர்ட் அணிந்த வாலிபர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். இவர்கள் மதிய உணவு ஏதும் ஆர்டர் செய்யாத நிலையில், நாங்கள் ஏதும் உணவுப்பொருள் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, முகவரி மாறி வந்திருப்பேன் என்று தெரிவித்தவர், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். 

maharashtra

பெண் தண்ணீர் எடுத்து வர வீட்டிற்குள் சென்ற நிலையில், அவரது மகன் வாயிலில் இருந்துள்ளார். அவரின் கழுத்தில் கத்தியை வைத்த மர்ம நபர் பெண்ணின் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து தரச் சொல்லி மிரட்டி இருக்கிறார். பெண்ணும் மகனின் உயிரை காப்பாற்ற வேண்டி ரூ.11 இலட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம், செல்போனை கொடுத்துள்ளார்.

கயவன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்லவே, பெண்மணி கணவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மர்ம நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

Note: Title Image Representative