த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
துயரமே வாழ்க்கையின் முடிவாக அமைந்ததால் சோகம்.. 28 வயது இளம்பெண் விபத்தில் பலி.. குடிகாரனால் நடந்த துயரம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, லால்பாக் பகுதியை சேர்ந்தவர் நுபுர் மனியர் (28). இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த நிலையில், பேருந்து ஒன்று மோதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தை ஏற்படுத்திய பேருந்து, தனது கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள், 2 டூ-வீலர், 9 பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நுபுர் மத்திய அரசின் பணியாளர் ஆவார். குடிபோதை ஆசாமி பேருந்தின் ஸ்டியரிங்கை திடீரென லாக் செய்த காரணத்தால், இத்துயரம் அரங்கேறி இருக்கிறது. மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடிகாரனால் நடந்த சோகம்
இந்த சர்ச்சை சம்பவத்தில் ஈடுபட்ட துடா முரளிதர ஷிண்டே (40), சம்பவத்தின்போது மதுபோதையில் பேருந்தை விபத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சை செயலை செய்துள்ளார். இவர் ஓட்டுநராக பணியாற்றி வந்த காரணத்தால், நொடிப்பொழுதில் ஸ்டியரிங்கை லாக் செய்து இருக்கிறார். பேருந்தை நடுவழியில் நிறுத்த ரகளை செய்தபோது, ஷிண்டே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: நடுரோட்டில் நாயின் மீது ஆட்டோவை ஏற்றிய ஓட்டுநர்; நொடிப்பொழுதில் இன்ஸ்டன்ட் கர்மா.. துள்ளத்துடிக்க அதே இடத்தில் சாவு.!
திருமணம் நடக்கவிருந்த நிலையில் பரிதாபம்
மத்திய அரசு பணியாளராக நுபுர், விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் தனது துணையை கரம்பிடிக்க காத்திருந்துள்ளார். அவர் தனது எதிர்கால துணையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போதுதான் சோகம் நடந்துள்ளது. அவரின் உடலில் பேருந்து சக்கரம் ஏறி-இறங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் துணை கை-கால்களில் கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நுபுரின் தந்தை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் வேலை மகளுக்கு கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, தனது வாழ்க்கை துணையையும் அவர் தேர்வு செய்திருந்த நிலையில், விபத்தில் இந்த சோகம் நடந்துள்ளது. குடிபோதை நபரால் நொடியில் திருமண ஜோடியின் எதிர்காலம் நொறுங்கிப்போன நிலையில், பலரும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: #BigBreaking: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; நீதிகேட்ட போராட்டத்தில் கல்வீச்சு.. பதற்றம்.!