தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 தமிழர்கள் மும்பையில் கைது.. நூதன திட்டம் விசாரணையில் அம்பலம்..! 

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 தமிழர்கள் மும்பையில் கைது.. நூதன திட்டம் விசாரணையில் அம்பலம்..! 


maharashtra-mumbai-7-tamil-state-person-arrested-robber

டக்-டக் எனப்படும் நூதன டெக்னீக்கை உபயோகம் செய்து மும்பையில் திருட்டு செயலில் ஈடுபட்ட 7 தமிழர்கள் மராட்டிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே, நவி மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் நூதன கொள்ளை நடைபெற்று வந்தது. இந்த கொள்ளை கும்பலானது உரிமையாளர் இல்லாமல் ஓட்டுநர் மட்டும் கார்களில் சென்றார்கள், அவர்களை குறிவைத்து தொடர் கைவரிசை காண்பித்துள்ளது. 

கார் செல்லும் போது காருக்கு அடியில் கற்கள் அல்லது பிற பொருட்கள் தாறுமாறாக விழுவதுபோன்று முன்னேற்பாடுகளை செய்து, ஓட்டுனருக்கு முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் காரின் பாகம் ஏதும் சேதமாகிவிட்டதோ? என்று எண்ணி காரில் இருந்து இறங்க, 2 பேர் அவரிடம் பேச்சு கொடுத்து, பிற 3 பேர் காரில் இருக்கும் உடமைகளை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இவ்வாறாக பல இடங்களில் ஒரே கைவரிசையை காண்பித்து கும்பல் அட்டகாசம் செய்து வந்த நிலையில், இவர்களின் நூதன டெக்னீக்கால் டக்-டக் கொள்ளைக்கும்பல் என்ற பெயரையும் பெற்றனர். சமீபத்தில் இவர்கள் காரில் இருந்து ரூ.10 இலட்சம் கொள்ளையடித்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

maharashtra

விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற விபரம் தெரியவரவே, திலக் நகர் பகுதியில் சமீபத்தில் தமிழ் உணவு ஆர்டர் செய்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, 7 பேருக்கான சாப்பாடு பட்டியல் தெரியவந்து 5 நாட்கள் கண்காணிப்புக்கு பின்னர் கையும் களவுமாக 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது. 

கைதானவர்கள் விபரம்: மோகன் ராமகிருஷ்ணன் (வயது 43), வினோத் ராஜேந்திரன் (வயது 42), குமார் முதலியார் (வயது 40), கிட்டு சேர்வை (வயது 52), சந்தோஷ் சேர்வை (வயது 38), ஆறுமுகம் சேர்வை (வயது 48), முருகன் மாணிக்கம் (வயது 70). இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்? வேறு திருட்டில் ஈடுபட்டனரா? என்ற விபரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.