ஐயோ.. புள்ள..! டியூஷன் முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்! தூக்கி வீசப்பட்டு..... பகீர் சிசிடிவி காட்சி..!!!



maharashtra-minor-bike-crash-cyclist

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதியில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் மீது மோதியது. நாகசென் நகர் பகுதியில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுவன், பெரிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

டியூஷன் முடிந்து வீடு திரும்பிய சிறுவன்

பத்ராவதியைச் சேர்ந்த சிறுவன், வழக்கம்போல் டியூஷன் வகுப்பை முடித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது நாகசென் நகர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவன் மீது மோதியது. மோதிய வேகத்தில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: நெஞ்சே நடுங்குது...! திடீரென வீசிய பலத்த சூறாவளி.. பல்டி அடித்து பறந்த மரங்கள், வீடுகள்..! பீதியில் உறைந்த கிராம மக்கள்.... பதைபதைக்க வைக்கும் காட்சி..!!!

17 வயது ஓட்டுநரைப் பிடித்த பொதுமக்கள்

விபத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த சிறுவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 17 வயது சிறுவனைப் பொதுமக்கள் பிடித்து வைத்தனர். இதுகுறித்து பத்ராவதி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கிய 8 வயது சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவனையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைனர்கள் வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்த கோரிக்கை

குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ள பகுதிகளில், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மைனர்கள் வாகனங்களை இயக்குவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சிறுவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தடுக்க போலீசார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகளின் வாகனப் பயன்பாட்டில் பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: உங்க பொண்ண கொன்னுட்டேன் மாமா...! நள்ளிரவில் போன் போட்டு மாமனாரை கதறவிட்ட ஆட்டோ டிரைவர்..! நடு அறையில் இருக்கும் உடல்.... பகீர் சம்பவம்..!!!