இந்தியா

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிப்பு? - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி.!

Summary:

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிப்பு? - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி.!

மத்திய, மாநில மருத்துவ வல்லுநர் குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டு, தேவை என்றால் ஊரடங்கு கட்டுப்பாடு குறித்த இறுதி முடிவு முதல்வரால் எடுக்கப்படும் என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றுவரை 10 பேருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய்த்தொற்று அதிதீவிரத்துடன் இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. 

இதனால் மீண்டும் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஏற்கனவே கடந்த கொரோனாவின் இரண்டு அலையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவிக்கையில், "தற்போதைய நிலையில் அமலில் உள்ள தளர்வுகள் நீக்கப்படும் பட்சத்தில் மக்கள் சிரமப்படுவார்கள். 

சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படுவது தொடர்பாக மத்திய, மாநில கொரோனா தடுப்புக்குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டு, அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி, முதல்வரிடம் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 


Advertisement