செருப்பு தொலைந்து விட்டது, உள்துறை அமைச்சருக்கு போதை ஏறவில்லை சர்ச்சை புகார்கள்..!

செருப்பு தொலைந்து விட்டது, உள்துறை அமைச்சருக்கு போதை ஏறவில்லை சர்ச்சை புகார்கள்..!



madhya-pradesh-police-case-issue

மாநில உள்துறை மந்திரிக்கு மது அருந்தினால் போதை ஏறவில்லை என்று ஒருவரும், காவல்துறையில் தன்னுடைய செருப்பு தொலைந்து விட்டது என ஒருவரும் புகார் மற்றும் மனு அளித்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயின் மாவட்டத்தில் தனியார் வாகன காப்பகத்தில் வேலை செய்பவர் லோகேந்திரா சோதியா. இவர் அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ராவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "ஒரு மதுபான கடையை குறிப்பிட்டு அதில் மது அருந்தினால் போதை ஏறவில்லை என்றும், இதற்கு கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் எழுதியிருக்கிறார்.

மேலும், "உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி குடித்தும் போதை ஏறவில்லை. இதனால் அதிகாரிகள் அந்த கடையில் சோதனை செய்து ஏன் போதை ஏறவில்லை? என காரணம் கூற வேண்டும்" என்றும் எழுதியிருக்கிறார். அத்துடன் இந்த கடிதத்தை அவர் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கும், மாநில மந்திரிக்கும் அனுப்பிய நிலையில், இதே போல மற்றொருவரும் ஒரு புகார் அளித்துள்ளார்.

Madhya pradesh

அதில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திரா பக்ரி என்பவர் காவல்துறையில் தன்னுடைய 180 ரூபாய் மதிப்புள்ள கருப்பு செருப்பு தொலைந்து விட்டதாகவும், ஒருவேளை அந்த செருப்பு கொலை மற்றும் குற்றம் நடக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அதற்கும், தனக்கும் தொடர்பு உண்டு என்று தன்னை கைது செய்து விடுவீர்கள் என்றும் முன்கூட்டியே தெரிவித்து புகார் அளித்துள்ளார்.

அத்துடன் புகார்கள் கொடுப்பதே கொலை மற்றும் குற்றம் ஆகியவற்றை தடுப்பதற்காக மட்டுமே, இதற்காக மது அருந்தினால் போதை ஏறவில்லை எனவும், செருப்பு காணவில்லை என்றும் புகார் கொடுப்பது மிகவும் அதிகப்பிரசங்கித்தனம் மற்றும் கண்டிக்கத்தக்கது.