இந்தியா

மதுபோதையில் செல்போன் டவரின் உச்சிக்கு சென்று ரகளை..! குடிபோதையில் களேபரம்.!!

Summary:

மதுபோதையில் செல்போன் டவரின் உச்சிக்கு சென்று ரகளை..! குடிபோதையில் களேபரம்.!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், விஜய் நகர் பகுதியில் மதுபோதையில் ஆசாமி வலம்வந்துள்ளார். அங்கு செல்போன் கோபுரம் ஒன்று இருந்த நிலையில், மதுபோதையில் தள்ளாடி வந்தவர் திடீரென அதன் மீது ஏற தொடங்கினார். 

இதனைக்கண்ட மக்கள் அவரை இறங்கி வர வேண்டுகோள் வைத்தும் பலனின்றி, வேகமாக செல்போன் கோபுரத்தின் உச்சிப்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரை கீழே இறங்கி வர அறிவுறுத்தியுள்ளனர். 

45 நிமிடங்கள் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரமாட்டேன் என கொக்கரித்த குடிகாரர், மக்கள் திரளாக கண்டதை பார்த்து கீழே வந்துள்ளார். அவரை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


Advertisement