இந்தியா

விமானத்தை போலவே இனிமேல் ரயிலில் அதிகப்படியான லக்கேஜ் எடுத்துச்சென்றால் கட்டணம்! ரயில்வே துறை அதிரடி!

Summary:

luggage charges in train


விமானங்களை போலவே ரயிலில் அதிக எடை கொண்டுசென்றால் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை - அகமதாபாத் தேஜஸ் ரயிலில் முதல் கட்டமாக இது நடைமுறைக்கு வர உள்ளது. 

ஐஆர்சிடிசி நாட்டின் சில முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் இயங்கும் ரயில்களை தனியார் வசம் ஒப்படைத்திருந்த நிலையில், ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தநிலையில், கடந்த மாதம் மும்பைக்கும் ஆமதாபாத்துக்கும் இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. 

புதிதாக இயக்கப்படும் இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அளவுக்கு அதிகமான எடையை கொண்டு செல்லும் பயணிகளிடம், தனியாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏசி சேர் கார் பயணி ஒருவர் 70 கிலோ வரை எடை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சாதாரண சேர் கார் ஆக இருந்தால் 40 கிலோ வரை கொண்டு செல்லலாம் எனவும், 12  வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் டிக்கெட்டுக்கு 50 கிலோ லக்கேஜ் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் எடுத்துச்சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement