நடைபாதை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மத்திய அமைச்சர் அதிரடி!

நடைபாதை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மத்திய அமைச்சர் அதிரடி!


Loan for key steps salesmans

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

 

ஊரடங்கால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகளின் நலனுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். சிறப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரையில் கடன் வழங்குவதன் மூலம் சுமார் 50 லட்சம் பேர் பலன் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.