இந்தியா

பதறவைக்கும் வீடியோ.. 4 பேர் மீது மின்னல் தாக்கும் நேரடி காட்சிகள்.... மரத்தடியில் நின்றபோது நடந்த சோகம்..

Summary:

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இந்நிலையில் அரியானா மாநிலம் குர்க்ராமில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் நான்கு பேர் தோட்ட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால் மழையில் இருந்து தப்பிக்க அந்த நான்குபேரும் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றின் அடியில் சென்று நின்றுகொண்டனர்.

அப்போது அவர்கள் நின்றுகொண்டிருந்த மரத்தின் மீதும், அவர்கள் மீதும் மின்னல் ஒன்று வேகமாக தாக்கியது. மின்னல் தாக்கியதில் நால்வரும் காயமடைந்து மயங்கி விழுந்தனர். இந்தக் காட்சி அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் அவர்கள் நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டநிலையில் மற்றொருவர் அதிகமான தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். மற்ற இருவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மின்னல் தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.


Advertisement