இப்படி நடந்து ரொம்ப நாள் ஆச்சு..! ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று..!
இப்படி நடந்து ரொம்ப நாள் ஆச்சு..! ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று..!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 62 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் சற்று கட்டுப்பாட்டில் இருந்தது. இதனிடையே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்துவந்தது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக இல்லாத அளவிற்கு இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 62 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 11,908,910 ஆக உயர்ந்துள்ளது.