அரசியல் இந்தியா

கிளம்பிய பெரும் சர்ச்சை! ரஜினிக்கு ஆதரவாக களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகை! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

Kushboo supporting rajini for periyar issue

சென்னையில்  துக்ளக்  இதழின் 50-வது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,  பெரியார் குறித்து பேசியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோரிக்கையும், புகாரும் வைக்கப்பட்டது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நான் கூறியதில் எந்த தவறும் இல்லை மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்துவிட்டார். அதற்கு பல அரசியல் தலைவர்களும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ ரஜினிகாந்திற்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரியோ தவறோ. அது அவருடைய சொந்த விருப்பம் மற்றும் தனிப்பட்ட பார்வை. ரஜினி சார் இவ்வாறு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது நமக்குத் தேவை நேர்மை மட்டுமே. பயத்தை வைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. உங்களுக்கு எது மகிழ்ச்சியோ அதனை செய்யுங்கள். அனைவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. எங்கள் அனைவரையும் மகிழ்விக்க முடியாது என கூறியுள்ளார்.


Advertisement