அரசியல் இந்தியா

பிரதமர்களை நினைவு கூறும் பிரமாண்ட திட்டத்திற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு!

Summary:

Kushboo opposes for pm museum

பிரதமர் மோடி நேற்று அறிவித்த பிரமர்களுக்கான அருங்காட்சியத்திற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வாழ்க்கை குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரதமர்களின் வாழ்க்கை வரலாற்றையும் விவரிக்கும் வண்ணம் டெல்லியில் ஒரு நாடாளுமன்ற பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார். 

இந்நிலையில் இன்று இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, "அரசு கருவூலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தினை விவசாயிகளின் குறையை தீர்க்கவோ, நீர் சேமிப்பை மேம்படுத்தவோ, தரமான கல்வி, சாலை வசதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாதுகாப்பு துறை ஆகியவற்றில் பயன்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் இதைப் போன்ற அருங்காட்சியத்திற்கு செலவு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement