வினோத தண்டனையால் குடிப்பழக்கத்தை முற்றிலும் ஓழித்த கிராமம்! குவியும் பாராட்டு!

வினோத தண்டனையால் குடிப்பழக்கத்தை முற்றிலும் ஓழித்த கிராமம்! குவியும் பாராட்டு!



Kujarath drink

குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் குடிப்போதையை ஒழிக்க குடிப்பவர்கள் இனி ஊருக்கே கறி விருந்து வைக்க வேண்டும் என வினோத தண்டனையை வழங்கி மதுவை ஒழித்து சாதனை படைத்துள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் வசிக்கும் காதிஸ்கிரா என்ற ஊரில் குடிப்போதையினால் அதிக கொலை மற்றும் பிரச்சனை ஏற்ப்பட்டு வந்துள்ளது. அதனை தடுக்க கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளனர்.

Khjarath

அதன் படி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் குடிப்போதையில் ஊருக்குள் வருபவர்களுக்கு 2000 ரூபாய் தண்டனையும் குடித்து விட்டு பிரச்சனை செய்பவர்களுக்கு 5000 ரூபாய் தண்டனையும் வழங்கியது. 

அதுமட்டுமின்றி குடிப்போதையில் வருபவர்கள் அந்த ஊர் மொத்த மக்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அதற்கு அதிக செலவு ஏற்படுவதால் அந்த ஊர் மக்கள் குடியை ஒழித்து விட்டதாக ஊர் மக்கள் கூறியுள்ளனர்.