உயிருக்கு போராடிய முதியவர்..! மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க மறுத்ததால் உயிரை விட்ட பரிதாபம்.!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் ஒருவருக்கு மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க மறுத்ததால் அந்த முதியவர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைரஸ் அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளை அனுமதிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அனைத்து பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகள் வெளிநோயாளிகளை அனுமதிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிர்க்கு போராடி வந்துள்ளார்.
சிகிச்சைக்காக உறவினர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துசென்றும் எந்த ஒரு மருத்துவமனையும் அவரை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இறுதியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனை அந்த முதியவரை தங்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தது.
ஆனால், அதற்குள்ளாக அந்த முதியவர் மருத்துவமனையிலையே இறந்துவிட்டார். மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க மறுப்பு தெரிவித்ததால் முதியவர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.