அடச்செய்.. இதுக்குள்ளையுமா தங்கம் வச்சி கடத்தி வருவாங்க?.. ரூ.1 கோடி தங்கத்துடன் சுங்கத்துறையிடம் சிக்கிய 2 பேர்..!kochi-airport-customs-seized-rs-1-crore-worth-smuggling

சவூதி அரேபியா மற்றும் துபாய் போன்ற வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், திரும்பி வரும் போது தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலங்களில் வசித்து வரும் பலரும் அரேபிய நாடுகளில் பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் மறைமுகமாக தங்கத்தை கடத்தி வந்து சிக்குவது வாடிக்கையாகியுள்ளது. 

அரசுக்கு தெரியாமலேயே அரசின் பெயரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் தங்கம் கடத்திய ஸ்வப்ன சுரேஷ் போன்ற பல நபர்கள் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேரளாவுக்கு அரேபியாவில் இருந்து வரும் நபர்கள் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். ஷார்ஜாவில் இருந்து கொச்சிக்கு வந்த 2 பயணிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிவரவே, அவர்களின் உடமையை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். 

Kochi

அப்போது, அதில் தங்கம் ஏதும் இல்லாத நிலையில், அதிகாரிகளுக்கு சந்தேகமும் குறையவில்லை. இதனால் அவர்களின் உடையை சோதனை செய்தபோது, இருவரும் ஆணுறையை ரகசியமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதித்தபோது, ஆணுறைக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், இருவரும் கேரளாவில் உள்ள மலப்புரம் பகுதியை சேர்ந்த சித்தார்த் மதுசூதனன், நிதின் உன்னிகிருஷ்ணன் என்பது உறுதியானது. இவர்களிடம் இருந்து 1.9 கிலோ அளவுள்ள ரூ.1 கோடி சந்தை மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.