14 வயது சிறுமிக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த கேரள இளைஞர்.. ரூம் போட்டு பிடித்த லண்டன் அதிகாரிகள்...!

14 வயது சிறுமிக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த கேரள இளைஞர்.. ரூம் போட்டு பிடித்த லண்டன் அதிகாரிகள்...!


Kerala Youngster Studies at England Police Arrest Child Sexual Harassment Case

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை, இங்கிலாந்து காவல் துறையினர் விடுதியில் அறையெடுத்து அதிரடியாக கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தில் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் துயரங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், சிறுமிகளுக்கு இணையவழியில் அறிமுகமாகும் நபர்கள் பாலியல் தொல்லை கொடுப்பது உறுதியானது.

இதனையடுத்து, சிறுமிகளின் வலைதள கணக்குகளில் வரும் பாலியல் தொல்லை தொடர்பான விபரங்களை இலண்டன் சைபர் கிரைம் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து இலண்டன் நகருக்கு மேற்படிப்புக்கு வந்த இளைஞர், சிறுமிகளை பாலியல் உறவுக்கு அழைத்து அம்பலமானது. 

இவர் கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் ராமபுரம் நகரை சேர்ந்தவர் ஆவார். இளைஞர் இலண்டனை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளம் மூலமாக அழைப்பு விடுத்து, பாலியல் ரீதியாக பேசி இருக்கிறார். இந்த விஷயம் இலண்டன் காவல் துறையினருக்கு தெரியவரவே, அவரை கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர்.  

KERALA

இதனையடுத்து, இளைஞரை அங்குள்ள ஹோட்டலுக்கு வருமாறு சிறுமியின் கணக்கில் இருந்து அழைப்பு விடுக்கவே, ஆனந்தமாக வந்த வாலிபரை அதிரடியாக சுற்றிவளைத்து அதிகாரிகள் கைது செய்தனர். காவல் துறையினர் வசம் சிக்கிய இளைஞர் தவறான ஆசையில் வந்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கதறி அழுதுள்ளார். 

மேலும், இனிமேல் இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் எனவும் கெஞ்ச, அதனை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் இளைஞரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் விசாரணைக்கு பின்னர் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.