ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
தாய் - மகளின் மீது ஆசிட் வீசி தாக்குதல்.. முகம் கருகி துடித்த தாய்.. அரங்கேறிய பயங்கர செயல்.!
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு, அம்பலவாயல் பகுதியை சேர்ந்தவர் சணல். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நிஜிதா (வயது 39). இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், அவ்வப்போது தம்பதிகள் தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிஜிதா தனது கணவரை பிரிந்து தனியே மகளுடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, தாய் - மகள் இருவரும் வீட்டில் இருந்த நிலையில், அங்கு வந்த வாலிபர் அவர்களின் மீது ஆசிட் வீசி தப்பி சென்றுள்ளார். இதனால் நிஜிதாவின் முகம் படுகாயமடைந்து கருகியது. மகளுக்கு ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அம்பலவாயல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.