அடேங்கப்பா.. 7 வருடமாக கணவனை கொலை செய்ய உணவில் நச்சு.. பாசக்கார மனைவியின் பகீர் காரியம்.!

அடேங்கப்பா.. 7 வருடமாக கணவனை கொலை செய்ய உணவில் நச்சு.. பாசக்கார மனைவியின் பகீர் காரியம்.!


Kerala Thiruvananthapuram Kottayam Wife Attempt to Kill Husband Last 7 Years add Food Slow Poison

கணவனை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி, 7 வருடமாக கணவனின் உணவில் மெல்லக்கொல்லும் நச்சை கலந்து வந்த பகீர் செயல் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். கோட்டயம் பாலா நகரை சேர்ந்தவர் ஆஷா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கணவன் - மனைவி இருவரும் கோட்டயம் பாலா நகரில் வசித்து வந்துள்ளனர். 

அப்பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு சுரேஷ் ஐஸ்கிரீம் விநியோகம் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஆம் வருடத்தில் அதே பகுதியில் சொந்தமாக வீடும் கட்டி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து, கணவன் - மனைவியிடையே குடும்ப சண்டை ஏற்பட, கருத்து வேறுபாட்டால் இருவரும் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளனர். 

இதற்குள்ளாக சுரேஷின் உடல்நலம் பாதிக்கப்படவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், உடல்நலம் முன்னேற்றம் அடையாத நிலையில், உயிருடன் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் வேலை விஷயமாக ஒரு மாதம் வெளியூரில் தங்கியிருந்த நிலையில், அவருக்கு எவ்வித உடல்நலக்குறைவும் ஏற்படவில்லை. 

KERALA

இதனால் பெரும் சந்தேகமடைந்த சுரேஷ் மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வழக்கம்போல உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியின் மீது சந்தேகமடைந்து, அவரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது, மனைவி மருந்து கடையில் சில மாத்திரைகளை வாங்கி வருவது தெரியவந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக மனைவியின் தோழியிடம் விசாரணை செய்யவே, அவர் மனிதரை மெல்ல கொல்லும் விஷத்தன்மை கொண்ட மாத்திரையை வாங்கியதாக தெரிவித்து இருக்கிறார். இந்த மாத்திரையை ஆஷா உணவில் கலந்து கொடுத்ததால் சுரேஷின் உடல்நலம் பாதிக்கப்பட்டது உறுதியகவே, கடந்த 2015 ஆம் வருடம் முதல் 7 வருடமாக கணவரை கொலை செய்ய திட்டம் நடந்துள்ளது. 

பேரதிர்ச்சி அடைந்த சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து ஆஷாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.