இந்தியா

முஸ்லீம் பெண்ணுடன் மகன் திருமணம்... தந்தைக்கு ஆப்பு.. கண்ணீரில் கலைஞர்..!!

Summary:

முஸ்லீம் பெண்ணுடன் மகன் திருமணம்... தந்தைக்கு ஆப்பு.. கண்ணீரில் கலைஞர்..!!

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் வினோத் பனிக்கர்‌. இவர் பூராக்கலை நடனக்கலைஞர் ஆவார்‌. அங்குள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று நடனம் ஆடுவது வழக்கம். 

குறிப்பாக அங்குள்ள குனிய பரம்பாத் பகவதி கோவிலில் தனது குழுவுடன் நடனமாடி வந்துள்ளார்‌. இந்த நிலையில், இவரின் மகன் முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிய வருகிறது. 

இந்த தகவலை அறிந்த நிர்வாகிகள் வினோத் கோவிலில் பூராக்காளி நடனமாடுவதை தடை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன வினோத் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் கேட்டு வரும் நிலையில், அவர்கள் பதிலளிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement