இந்தியா வீடியோ

கோரதாண்டவமாடும் கொரோனாவை விரட்ட கேரள காவல்துறை கொடுத்த ஐடியா! வைரலாகும் வீடியோ!

Summary:

Kerala police post video about corono awarness

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பரவிய இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதுமே பெரும் பீதியில் உள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பிலும், பல பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து  ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்தியாவில் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement